தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு

தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு

பட்டாசு வணிகம் நமது திருநாட்டின் தலைசிறந்த பாரம்பரியமிக்க வணிகத்தில் ஒன்றாகும். ஆனால் சில வருடங்களாக நமது வணிகம் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. நமது வணிகத்தில் ஏற்படும் இன்னல்களை நீக்குவதற்கு இந்த தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு

தலைவர் உரை

பட்டாசு வணிகம் நமது திருநாட்டின் தலைசிறந்த பாரம்பரியமிக்க வணிகத்தில் ஒன்றாகும். ஆனால் சில வருடங்களாக நமது வணிகம் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. நமது வணிகத்தில் ஏற்படும் இன்னல்களை நீக்குவதற்கு இந்த தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது.

அனைத்து வகையான பட்டாசு வியாபாரிகளையும் மாநில அளவில் ஒருங்கிணைத்து கூட்டமைப்பு உருவாக்க சிவகாசியில் உள்ள நம் தொழில் முதன்மையானவர்களை சந்தித்து கூட்டமைப்பு தேவை பற்றி கூறிய போது அவர்கள் மனமுவந்து உரிய வழிகாட்டினார்கள்.

அதற்கிணங்க, சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத்தின் முழு ஆதரவுடனும், முயற்சியாலும் நமது கூட்டமைப்பு மதுரையை தலைமையிடமாக கொண்டு இந்த ஆண்டு, 2018 பிப்ரவரி மாதம் 4ம் தேதி தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் முதுநிலைத் தலைவர் திரு. S. இரத்தினவேலு, தமிழ்நாடு பட்டாசு தயாரிப்பாளர் சங்க தலைவர் திரு. A. ஆசைத்தம்பி மற்றும் ஸ்ரீ காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிர்வாக இயக்குநர் திரு. A.P. செல்வராஜன் ஆகியோரால் திருவிளக்கு ஏற்றி திருச்சியில் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு வணிகர்களின் நலனுக்காக பட்டாசு சம்மந்தப்பட்ட அனைத்து சட்ட விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை முதல் நோக்கமாக கொண்டு செயல்படும், நாம் சார்ந்த அரசு அதிகாரிகளிடம் நல்லுறவை வளர்த்து நமது உரிமம் குறித்த நடைமுறை சிரமங்களை தீர்த்து, தற்காலிக சில்லறை விற்பனை உரிமத்தின் விற்பனை காலத்தை பண்டிகைக்கு முன் 30 நாட்களுக்காக பெறுவது நமது கூட்டமைப்பின் குறிக்கோளாக கொண்டு செயல்படும்.

நமது சுதேசி பட்டாசு தொழிலையும், வணிகத்தையும் மேம்படுத்தி, கலாச்சாரத்தையும், பண்டிகைளையும், திருவிழாக்களையும் மேலும் சிறப்பிக்க, நமது தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு பாடுபடும் என உறுதி கூறுகிறேன்.

திரு. ராஜா சந்திரசேகரன், தலைவர்


நோக்கம், வழிமுறை, இலக்கு

நோக்கம்
வெடிபொருள் கட்டுப்பாட்டு சட்டம், வணிகச் சட்டம் குறித்து விளக்குதல் - பட்டாசு வணிகத்தில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் - பட்டாசு பயன்பாட்டை அதிகரிக்க செய்தல்.

வழிமுறை
எளிய முறையில் உரிமம் பெறுதல், விரைந்து புதுப்பித்தல். அரசு அதிகாரிகளிடம் நல்லுறவை ஏற்படுத்துதல். பட்டாசு தொழிலையும் வணிகத்தையும் மேம்படுத்துதல். நமது கலாச்சாரத்தையும், பண்டிகைகளையும் கொண்டாட்டங்களையும் பாதுகாத்தல்.

இலக்கு
சிறந்த சிந்தனையுடன், விடாமுயற்சியுடன் தொழிலையும் வணிகத்தையும் அதிகரித்தல். தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகர்களையும் இணைத்து சிறப்பாக செயல்படுதல். தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு

திரு. ந. இளங்கோவன், செயலாளர்


உறுதிமொழி

நமது எண்ணங்களில் ஒற்றுமை மலரட்டும்!
ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து அனைவரும் வெற்றி பெறுவோம்!
பட்டாசு வணிகத்தில் பாதுகாப்பு முதற்கடமை!
பட்டாசுகளின் வினை அறிந்து விவேகத்துடன் செயல்படுவோம்!
பொது மக்களின் உடமைகளையும் உயிர்களையும் பாதுகாப்போம்!
வெடிபொருள் சட்டவிதிகள் நமது வளர்ச்சிக்கே! சட்ட விதிகளை பின்பற்றுவோம்!
சட்ட விரோத பட்டாசுகள் விற்பனையைத் தவிர்ப்போம்!
பாதுகாப்பான பட்டாசு வணிகத்தின் மூலம் அரசு அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவோம்!
பாதுகாப்பான பயன்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி,
பொது மக்களின் நன்மதிப்பைப் பெறுவோம்!
பட்டாசு வணிகத்தின் மூலம் அரசுக்கு வருவாயையும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும்
பாரம்பரியமிக்க பட்டாசு வணிகத்தைப் பாதுகாப்பதும் எங்கள் லட்சியம்!
இந்திய மக்களின் அனைத்து பண்டிகை கொண்டாட்டங்களில்
பட்டாசுகள் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்வோம்!
இந்தியாவை பட்டாசுகளால் ஒளிரச் செய்வோம்!

தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு

Contact Us

Federation of Tamil Nadu Fireworks Traders

Our Address

Federation of Tamil Nadu Fireworks Traders

14, Subramanyapuram,
2nd Main Road,
Madurai.

Phone No.

Office

0452 - 2672866