அறிவுரைகள்

பட்டாசு கடை மற்றும் கிட்டங்கிகளின் பாதுகாப்பு

பட்டாசுகளை கையாளுவதிலும் அதை கடைகளில் சேமித்து வைப்பதிலும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க கீழே கூறப்பட்டுள்ள வழிமுறைகளையும், நெறிமுறைகளையும் உயர்ந்த நோக்கத்துடன் பின்பற்றினால் எந்த ஒரு விபத்தையும் அசம்பாவிதத்தையும் தவிர்க்கலாம்.

Petroleum and Explosive Safety Organisation - Sivakasi

அறிவுரைகள்

பட்டாசுகளை கையாளுவதிலும் அதை கடைகளில் சேமித்து வைப்பதிலும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க கீழே கூறப்பட்டுள்ள வழிமுறைகளையும், நெறிமுறைகளையும் உயர்ந்த நோக்கத்துடன் பின்பற்றினால் எந்த ஒரு விபத்தையும் அசம்பாவிதத்தையும் தவிர்க்கலாம்.

  • அனுமதிக்கப்பட்ட எடை அளவிற்கு மிகாமல் சேமித்து வைக்கவும்
  • அவசர கால வழியை (Emergency Exit) அடைக்கும் அளவிற்கு அங்கே அடுக்கி வைப்பதையோ சேமித்து வைப்பதையோ தவிர்க்க வேண்டும்
  • 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு விற்பனை இல்லை என்ற வாசகம் அடங்கிய பாதகைகள் வைக்கலாம்
  • கலர் மத்தாப்பு மற்றும் கேப் வெடிகளை தனித்தனியாக சேமித்து / அடுக்க வேண்டும்
  • பட்டாசு பண்டல்களை இறக்கும் போதும் ஏற்றும் போதும் கவனமாக கையாள வேண்டும். அந்த பணி செய்பவர்கள் மது அருந்தவோ, புகை பிடிக்கவோ கூடாது
  • ஒரு சமயத்தில் ஒரு இடத்தில ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனத்தில் பட்டாசு பண்டல்களை இறக்குதல் / ஏற்றுதல் செய்வதை தவிர்க்க வேண்டும்
  • பண்டல்களை (சரக்குகளை) வண்டியில் இருந்து இறக்கும் போதும் ஏற்றும் போதும் "உஷார்-கவனம்" போன்ற பலகையோ பேனரோ பாதகைகளையோ வைத்து எச்சரிக்கலாம்
  • "புகை பிடிக்க கூடாது" கடைக்கு அருகிலோ / எதிரிலோ பட்டாசு "வெடிக்க கூடாது" போன்ற எச்சரிக்கை பாதகைகளை வைக்கலாம்
  • கடையிலோ, கடைக்கு அருகிலோ மெழுகுவர்த்தி மற்றும் விளக்கு, மின்சார சாதனம் கொண்டு "சீலிங்" செய்வதை தவிர்க்க வேண்டும்
  • "Gift Box" கடையில் தயாரிக்கக்கூடாது
  • "Gift Box"-ல் எளிதில் உராய்வினால் தீப்பிடிக்க கூடிய கலர் மத்தாப்பு பெட்டிகள், கேப் வெடிகள் இல்லாதவாறு பார்த்து சரக்கு வாங்க வேண்டும்
  • அனுமதிக்கப்பட்ட கம்பெனி சரக்கை மட்டுமே வாங்கவோ விற்கவோ செய்ய வேண்டும்
  • சட்ட விரோதமாக தயாரித்த சரக்குகளை, சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசுகளை இருப்பு வைப்பதும், விற்பனை செய்வதும் கூடாது
  • "Stock Register" (இருப்பு பதிவேடு) முறைப்படி எழுதி அன்றாடம் பதிய வேண்டும்
  • உரிமதாரர் மற்றவர்களுக்கு பட்டாசு கடையை வாடகைக்கோ குத்தகைக்கோ விடக்கூடாது
  • அங்கீகரிக்கப்பட்ட / அனுமதிக்கப்பட்ட குறியீடுகளுடன் உள்ள Label ஒட்டிய சரக்குகளை அதற்குரிய பெட்டிகளில் மாத்திரம் வாங்கவோ விற்பனை செய்யவோ வேண்டும்
  • மேற்கூறிய வழிமுறைகளை / நெறிமுறைகளை / அறிவுரைகளை தவறாமல் கடைபிடித்தால் கடைக்கோ கடையால் மற்றவர்களுக்கோ ஒரு விபத்தும் ஆபத்தும் ஏற்படாது என்பது திண்ணம்

Petroleum and Explosive Safety Organisation - Sivakasi


தமிழ்நாடு காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினரின் அறிவுரைகள்

பட்டாசுகளை பாதுகாப்பாக உபயோகிப்பதற்கு தமிழ்நாடு காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினரின் அறிவுரைகள்

  • அங்கீகரிக்கப்பட்ட பட்டாசு ரகங்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். வெங்காய வெடி, பட்டாணி வெடி, அவுட் போன்ற வெடிகளை உபயோகிக்க கூடாது
  • குழந்தைகள், பெரியவர்களின் முன்னிலையில் அவர்களது மேற்பார்வையில் பட்டாசுகளை உபயோகிக்க வேண்டும்
  • சுற்று சூழலுக்கு பாதகம் விளைவிக்கும் சீன பட்டாசுகளை முற்றிலும் தவிர்க்கவும்
  • பட்டாசு வெடிக்கும் போது அருகில் வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்
  • பட்டாசு வெடிக்கும் போது பருத்தி ஆடைகள் அணிந்து கொள்வது பாதுகாப்பானது
  • பட்டாசு வெடிக்கும் போது காலணிகளை அணிந்து கொள்வது பாதுகாப்பானது
  • நீளமான பத்திகளை வைத்து வெடிகளை பற்ற வைக்க வேண்டும்
  • வாண வெடிகள், ராக்கெட் போன்ற பேன்ஸி ரக வெடிகளை திறந்த வெளியில் மற்றும் சமதள இடத்தில வைத்து உபயோகிக்க வேண்டும்
  • கம்பி மத்தாப்புகளை உபயோகித்த பின் தண்ணீர் உள்ள வாளியில் போட்டு குளிர்ந்த பின் அப்புறப்படுத்தவும்
  • பட்டாசுகள் பாதியில் எரிந்து அணைத்தால் அவற்றை மீண்டும் தீப்பற்ற முயற்சிக்க கூடாது
  • பட்டாசுகள் பற்ற வைக்கும் போது பக்கவாட்டில் தள்ளி நின்று பற்ற வைக்க வேண்டும். அதற்கு மேலாக குனிந்து பற்ற வைக்க கூடாது
  • மருத்துவமனை பள்ளிக்கூடம் அருகில் சத்தம் தரும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்
  • இரவு 10 மணிக்கு மேல் காலை 6 மணி வரை சத்தம் தரும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கவும்
  • தீப்பற்றக்கூடிய பொருட்கள், சிகரெட் துண்டுகள், அடுப்பு காஸ் சிலிண்டர் போன்றவற்றின் அருகில் பட்டாசுகள் வைக்கவோ, வெடிக்கவோ கூடாது
  • பட்டாசு உபயோகித்த பின் உள்ள குப்பைகளை மொத்தமாக வைத்து கொளுத்தக் கூடாது. ஏனென்றால் அதில் வெடிக்காத பட்டாசுகளும் இருக்கக்கூடும். அது ஆபத்தானது.
  • பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பாக எச்சரிக்கை உணர்வுடன் கவனமாக இருக்க வேண்டும்
  • பட்டாசு வெடித்த பின் கை, கால்களை நன்றாக சோப்பு உபயோகித்து கழுவுவது நல்லது
தமிழ்நாடு காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர்


பட்டாசு கடை அமைக்க விதிமுறைகள்

  • பட்டாசுக்கடை செங்கல் அல்லது கான்கீரீட் கட்டிடத்தால் கட்டப்பட்டு பாதுகாப்புமிக்கதாக இருக்க வேண்டும்
  • தரைத்தளத்தில் மட்டுமே இருக்க வேண்டும். கடையில் முறையான நுழைவு வாயில் மற்றும் அவசர வெளியேறும் வழி தனித்தனியாக இருக்க வேண்டும்
  • கடையின் கதவுகள் வெளிப்புறமாக திறக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும்
  • கடையானது, தரைத்தளத்திற்கு அடியிலோ, இடையிலோ அல்லது தரைதளத்திற்கும், முதல் தளத்திற்கும் இடையிலோ உள்ளதாக இருக்கக் கூடாது
  • கடையின் கட்டிடத்தில் மேல்தளம் இருந்தால், அங்கு குடியிருப்பு இருக்கக் கூடாது
  • கடை படிக்கட்டு அல்லது மின் தூக்கியின் அடியிலோ அல்லது அருகிலோ இருக்கக் கூடாது
  • கடையின் மின் இணைப்பு பெட்டி கட்டிடத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்
  • எண்ணெய்யில் எரியக்கூடிய விளக்கோ, கேஸ் விளக்கோ, வேறு எந்த திறந்தவெளி விளக்கோ உபயோகிக்க கூடாது
  • கடையின் கட்டிடத்தில் மின் இணைப்பு வயர்கள் வெளியில் தெரியும்படி இருக்கக் கூடாது.
  • கடையில் குறைந்தது இரண்டு தரச்சான்றுள்ள 10 கிலோ எடையுள்ள தீயணைப்பான்கள் பொருத்தப் பட்டிருக்க வேண்டும்
  • கடையில் குறைந்தது 9 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு தீ தடுப்பு தண்ணீர் நிரப்பப்பட்ட வாளிகள் மற்றும் இரண்டு தீ தடுப்பு மணல் நிரப்பப்பட்ட வாளிகள் வைத்திருக்க வேண்டும்
  • அவசர காலத்தில் தீ தடுப்பு நடவடிக்கையின் போது, தீயணைப்பு வாகனங்கள் எளிதில் அடையக் கூடியதாக இருக்க வேண்டும்
  • கடையின் கட்டிட அளவானது 9 சதுர மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்
  • ஒரு பட்டாசு கடைக்கும், மற்றொரு பட்டாசு கடைக்கும் குறைந்தது 15 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்
  • நிரந்தர உரிமம் பெற்ற கடையும், தற்காலிக உரிமம் பெற்ற பட்டாசு கடையும் எதிர் எதிரே இருக்கக் கூடாது
  • கடையில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் அறைக்கும், விற்பனை செய்யும் இடத்திற்கும் இடையே குறைந்தது 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் மற்றும் பாதுகாக்கப்பட்ட இடத்திலிருந்து குறைந்தது 50 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு

Contact Us

Federation of Tamil Nadu Fireworks Traders

Our Address

Federation of Tamil Nadu Fireworks Traders

14, Subramanyapuram,
2nd Main Road,
Madurai.

Phone No.

Office

0452 - 2672866